என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வக்கீல் பலி"
- சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
- ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.
சேலம்:
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) வக்கீல். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.
இந்த விபத்தில் வக்கீல் சந்திரசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வக்கீல் சந்திரசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
- இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பிரபல வக்கீலான இவர் வக்கீல்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரகதீஷ்வர் (வயது 30). வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இவர் தனது சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரகதீஸ்வரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் (50). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு காரில் சேலத்திலிருந்து கரூர் நோக்கி சென்றார்.
காரை முகமது மீரான் (26). ஓட்டினார். கார் நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் நல்லிபாளையம் அருகே சென்ற போது காரின் முன்பு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வழக்கறிஞர் சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. கார் மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான சையத்இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை கீரம்பூர் சுங்கசாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்தில் பலியான வக்கீல் சையத் இப்ராஹிம் பள்ளப்பட்டி தி.மு.க. முன்னாள் சேர்மனாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் மருதுபாண்டி (வயது34). இவர் பேரையூர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலையில் மதுரையில் அலுவலகப்பணி காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் பேரையூர் வந்து கொண்டிருந்தார்.
கப்பலூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மருதுபாண்டி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கீழே விழுந்த மருதுபாண்டியன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கப்பலூரைச் சேர்ந்த ராசு மகன் லோகநாதன் (22), சிவகாசி அரசரடி காலனியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மாரீஸ்வரன் (28) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
கோவை:
கோவை இடையர் பாளையம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சோபன் பாபு (வயது 33). வக்கீல். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டவர் (28) என்பவருடன் வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டுக்கு சென்றார்.
வேலை முடிந்ததும் 2 பேரும் இரவு கோவைக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சோபன் பாபு ஓட்டி வந்தார். இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சோபன்பாபு, ஆண்டவர் ஆகியோர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் சோபன்பாபு பரிதாபமாக இறந்தார். ஆண்டவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்